Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காணாமல் போனோரின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்: சுமந்திரன்

In இலங்கை
Published: 08:06 GMT, Apr 19, 2017 |
0 Comments
1142
icon_com
This post was written by : Risha
sumanthiran.Still002

காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான அலுவலகத்தை அமைப்பது தொடர்பான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், அலுவலகம் அமைக்கப்பட்டு காணாமல் போனோரின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோரின் உறவுகள் தொடர்ந்து முன்னெடுத்துவரும் போராட்டங்கள் குறித்து யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காணாமல் போனோரைக் கண்டறிவதற்காக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுவரும் காணாமல் போனோரின் உறவினர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கரிணையுடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

காணாமல் போனோரைக் கண்டறிவதற்காக அலுவலகம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டு வந்த நிலையில், அது தொடர்பிலான திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அலுவலகம் அமைக்கப்பட்டு காணாமல் போனோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg