Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறுகிறார் செரீனா

In டெனிஸ்
Updated: 08:33 GMT, Apr 19, 2017 | Published: 08:30 GMT, Apr 19, 2017 |
0 Comments
1217
This post was written by : Elakkiya

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறுகிறார். எதிர்வரும் 24 ஆம் திகதி வெளியாகவுள்ள சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் செரீனாவின் முதலிடம் உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தரவரிசை மதிப்பீட்டின்போது, கடந்த ஆண்டு ஜேர்மனியின் ஸ்டட்ஹர்ட் நகரில் நடைபெற்ற போர்சே டென்னிஸ் போட்டியின் முடிவுகள் நீக்கப்படுவதன் மூலம் செரீனாவுக்கு மீண்டும் முதலிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போதைய தரவரிசை பட்டியலில் 7335 புள்ளிகளுடன் ஜேர்மனிய வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் முதலிடத்திலும் 7010 புள்ளிகளுடன் செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg