Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாபர் மசூதி இடிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

In இந்தியா
Published: 08:37 GMT, Apr 19, 2017 |
0 Comments
1233
This post was written by : Shailu
Babri Masjid

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் பா.ஜ.க.வின் மூத்த தலைவரான அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவ்வழக்கை தொடர்ச்சியாக விசாரித்து இரு வருடங்களுக்குள் நிறைவுசெய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 13 பேர் ரேபர்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, அகமதாபாத் உயர்நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்த நிலையில்,  பா.ஜ.க தலைவர்களின் விடுதலையை எதிர்த்து மத்திய புலனாய்வுத் துறை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg