Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மஹிந்த கால ஊழல் மோசடிகள் குறித்த இறுதி அறிக்கைகள் தயார்!

In இலங்கை
Updated: 09:15 GMT, Apr 19, 2017 | Published: 09:00 GMT, Apr 19, 2017 |
0 Comments
1205
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இவ்வாரம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தினருடனும் நேரடியாகத் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மோசடிகள் தொடர்பான மூன்று அறிக்கைகளே ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாந்தோட்டை துறைமுக திறப்புவிழாவுக்காக செலவிடப்பட்ட பணத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான அறிக்கை, இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சட்டவிரோதமான முறையில் நியமனங்கள் வழங்கியமை மற்றும் சிறப்புரிமைகளை வழங்கியமை தொடர்பான அறிக்கை, வீதி வலையமைப்பை நடைமுறைப்படுத்தும் கருத்திட்டத்தில் சட்டவிரோதமான முறையில் லான் குரூஸ் வாகனமொன்றை பயன்படுத்தியமை உள்ளிட்ட ஊழல், மோசடிகள் தொடர்பான அறிக்கைகளே இவையென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg