Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரட்சியால் 7 இலட்சம் பேர் பாதிப்பு! – குடிநீருக்கு பற்றாக்குறை

In இலங்கை
Updated: 09:48 GMT, Apr 19, 2017 | Published: 09:19 GMT, Apr 19, 2017 |
0 Comments
1236
This post was written by : Varshini
Drought-Sri-Lanka_Newsfirst

நாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் கடும் வரட்சி காரணமாக சுமார் 7 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்திலேயே அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் வரட்சி காரணமாக, வடக்கு மாகாணத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 603 பேரும், கிழக்கு மாகாணத்தில் 95 ஆயிரத்து 334 பேரும், மேல் மாகாணத்தில் ஆயிரத்து 128 பேரும், தென் மாகாணத்தில் 3 ஆயிரத்து 77 பேரும், வடமத்திய மாகாணத்தில் ஒரு இலட்சத்து 990 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 3 ஆயிரத்து 369 பேரும், வடமேல் மாகாணத்தில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 439 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் ஒரு இலட்சத்து 96 ஆயிரம் குடும்பங்கள் குடிநீர் உட்பட தமது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய நீரைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. வரட்சி காரணமாக நீர் நிலைகளும் வற்றிப்போயுள்ள நிலையில், மக்கள் வெகுதொலைவிற்குச் சென்று நீரைப் பெறவேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கால்நடைகள் மற்றும் விவசாய செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதால், இவற்றை நம்பி வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஆங்காங்கே அவ்வப்போது சிறிது மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும், அது வரட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமையவில்லை. இன்னும் ஒரு சில தினங்களில் நாடளாவிய ரீதியில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டளவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ள நிலையில், அவ்வாறு இடம்பெறாவிட்டால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg