Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோனிக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் ஷேன் வோர்ன்

In கிாிக்கட்
Updated: 10:30 GMT, Apr 19, 2017 | Published: 10:23 GMT, Apr 19, 2017 |
0 Comments
1311
This post was written by : Elakkiya
201704190949436116_ipl-Cricket-Warne-support-to-Dhoni_SECVPF

தோனி யாருக்காகவும் எதற்காகவும் தன்னை நிருபிக்க தேவையில்லை என அவுஸ்ரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக கிரிக்கட்டில் பிரகாசிக்க முடியாமல் தடுமாறும் தோனி குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகிவரும் நிலையில் ஷேன் வோர்ன் ஆதரவாக குரல்கொடுத்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள வோர்ன், ‘ மூவகை கிரிக்கட்டிலும் தோனி தரம்வாய்ந்த அற்புதமான வீரர். மிகச்சிறந்த அணித்தலைவரும் கூட. மற்றவர்களுக்கு உந்துசக்தியாக இருப்பவர். அவர் யாருக்காகவும் எதனையும் நிரூபிக்க தேவையில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 61 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg