Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

‘குயின்’ படத்தின் கன்னட ரீமேக்கை கைப்பற்றினார் ரமேஷ் அரவிந்த்

In சினிமா
Updated: 10:24 GMT, Apr 19, 2017 | Published: 09:28 GMT, Apr 19, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Shailu
Ramesh Aravind

விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து கடந்த 2014ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான படம் ‘குயின்’.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.

‘குயின்’ தமிழ் ரீமேக் படத்துக்கு சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, அதனை இயக்குவதற்கு ரேவதி ஒப்பந்தமானார். இதில் கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கவிருப்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து குறித்த படம் எந்தவித காரணமும் இன்றி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது ‘குயின்’ படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கங்கனா ரணாவத்தின் வேடத்தில் பிரபல கன்னட நடிகை பரூல் யாதவ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ரமேஷ் அரவிந்த் ஏற்கெனவே தமிழில் கமல் நடிப்பில் வெளிவந்த ‘உத்தம வில்லன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg