Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

2019ஆம் ஆண்டு தேர்தலே எமது அடுத்த இலக்கு: துருக்கி பிரதமர்

In ஐரோப்பா
Updated: 11:19 GMT, Apr 19, 2017 | Published: 10:49 GMT, Apr 19, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Sylviya
11

துருக்கி ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரங்களை வழங்குவது குறித்த கருத்துக்கணிப்பில் எர்டோகன் வெற்றிபெற்றுள்ளதை தொடர்ந்து துருக்கி அரசாங்கத்தின் அடுத்த இலக்கு, எதிர்வரும் 2019ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள தேர்தலே என துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த கருத்தை அவர் இன்று (புதன்கிழமை) துருக்கித் தலைநகர் அங்காராவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவரது மனைவியுடன் கலந்துகொண்ட போதே தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மக்கள் கூடியிருந்ததாகவும் அவர்கள் துருக்கியின் தேசியக் கொடியை அசைத்து எர்டோகனுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் அரசியலமைப்பை மாற்றும் வகையில் எர்டோகனுக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் போது சுமார் 25 மில்லியன் மக்கள்  எர்டோகனுக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் 1.3 மில்லியன் மக்கள் எர்டோகனுக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது எனவும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg