Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஹிமாச்சலப்பிரதேசத்தில் கோர விபத்து: 40இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

In இந்தியா
Published: 10:51 GMT, Apr 19, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Shailu

ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 40-இற்கும் அதிகமான பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் விகாஸ் நகரில் இருந்து ஹிமாச்சல பிரதேசத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றே இன்று (புதன்கிழமை) காலை ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதோடு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

56 பயணிகளுடன் பயணித்த குறித்த பேருந்தானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில்  விபத்திற்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்தில் பலியானவர்களுக்கு உத்தரகாண்ட் அரசு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகையையும் அறிவித்துள்ளது.

பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், சிறிய அளவிலான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg