Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போராட்டங்களை கண்டுகொள்ளாது அரசாங்கம் தூங்குகிறது: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

In இலங்கை
Updated: 10:18 GMT, Apr 19, 2017 | Published: 10:18 GMT, Apr 19, 2017 |
0 Comments
1179
This post was written by : Risha

போராட்டங்களை கண்டுகொள்ளாது அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது என வவுனியாவில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் எனத் தெரிவித்து, காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 55ஆவது நாளாக தொடர்ந்துவருகிறது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறுகையில், “எனது கணவர் இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டார். இது தொடர்பில் சகல இடங்களிலும் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை.

இப்பிரச்சினைக்கு எமது உண்ணாவிரத போராட்டத்தின் மூலமேனும் தீர்வு கிட்டும் என எதிர்பார்த்தோம். ஆனால் எமது போராட்டம் குறித்து அரசாங்கம் அக்கறைக் கொள்ளாது தூங்கிக் கொண்டிருக்கிறது” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg