Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.சி.சி நிதியளிக்கும் திட்டத்தை தக்கவைத்துக்கொள்ள பி.சி.சி.ஐ பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

In கிாிக்கட்
Updated: 12:17 GMT, Apr 19, 2017 | Published: 11:29 GMT, Apr 19, 2017 |
0 Comments
1157
This post was written by : Elakkiya

இந்தியா, அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று கிரிக்கட் சபைகளுக்கும் வருமானங்களை பகிர்ந்தளிக்கும் திட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள வருடாந்த பொதுக் குழுக் கூட்டம்வரை தக்கவைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடைபெற்றிருந்த நிலையில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது அவுஸ்ரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கட் சபைகளுக்கு வருமானங்களை பகிர்ந்தளிக்கும் விதிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தாது தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச கிரிக்கட் சபையிடம் கோரிக்கை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை நிர்வாக சபையுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.

மேலும், அண்மையில் அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2:1 என்ற ரீதியில் வெற்றிகொண்ட இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையால் அறிவிக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg