Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரச்சினைக்கு தீர்வு தராத அரசை நல்லாட்சியாக ஏற்க முடியாது! – பன்னங்கண்டி மக்கள்

In இலங்கை
Updated: 11:38 GMT, Apr 19, 2017 | Published: 10:51 GMT, Apr 19, 2017 |
0 Comments
1228
This post was written by : Risha
pannan

ஒரு மாதக் காலமாக தெருவில் ஒதுங்கி போராடிவரும் எமது காணிப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவேனும் துணிவற்ற அரசாங்கத்தை எவ்வாறு நல்லாட்சி அரசாக ஏற்றுக் கொள்வது என பன்னங்கண்டி மக்கள் வினவியுள்ளனர்.

தமக்கான காணி உறுதி மற்றும் வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று (புதன்கிழமை) 29ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “யுத்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருந்த நாங்கள், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றோம். எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையில், எம்மை நாடிவந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்தோம். எனினும், நல்லாட்சியை நம்பி வாக்களித்த எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டவில்லை.

இந்த காணிப்பிரச்சினைக்கு பேசி தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாத கூட்டமைப்பும், அரசியல்வாதிகளும் எமக்கு தேவையில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg