Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மே விவாதம் (2ஆம் இணைப்பு)

In
Published: 11:09 GMT, Apr 19, 2017 |
0 Comments
1231
icon_com
This post was written by : Sylviya

நாடாளுமன்றத்தை சென்றடைந்த பிரதமர் தெரேசா மே, முன்கூட்டிய பொதுத் தேர்தல் குறித்து தற்போது உறுப்பினர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டிய தேர்தல் அறிவிப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருந்த விடயங்களை இன்னும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின்   முன்வைத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த மே,  பிரெக்சிற் தொடர்பான விடயங்களில் தமது கட்சி சாதகமான முன்னேற்றங்களை எட்டியதைப் போன்று எதிர்காலத்தில் நாட்டை பலமானதும் ஸ்திரத்தன்மையும் கொண்டதாக கட்டியெழுப்பும் என்றும்  வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றை நோக்கி புறப்பட்டார் பிரதமர் தெரேசா மே

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வகையில் பிரதமர் மே நாடாளுமன்றை நோக்கி புறப்பட்டுள்ளதாக சற்று முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜி.எம்.டி நேரப்படி 10.00 மணியளவில் பிரதமர் மே டவுனிங் ஸ்ரீற் 10ஆம் இலக்க இல்லத்தை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எம்.டி நேரப்படி 13.00 மணியளவில் குறித்த பொதுத் தேர்தல்கள் நடத்தப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளதாகவும் அதன் பொருட்டே பிரதமர் மே நாடாளுமன்றிற்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையே பிரித்தானிய பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என சட்டம் வகுக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மேயின் இந்த முன்கூட்டிய பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு எவருமே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg