Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுத் தேர்தல் குறித்த தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ள மறுத்தார் மே

In
Published: 11:26 GMT, Apr 19, 2017 |
0 Comments
1233
This post was written by : Sylviya
13

முன்கூட்டிய தேர்தல் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் விவாதங்களில் கலந்துகொள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  Radio 4’s   எனும் வானொலிச் சேவைக்கு இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்திருந்த பிரதமர், “பொதுத் தேர்தல் குறித்த விவாதங்களில் கலந்துகொள்ள மாட்டேன். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவே நான் விரும்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தெரேசா மேயின் குறித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவித்த தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின், தெரேசா மே நேருக்கு நேர் விவாதிப்பதை புறக்கணிக்கின்றார் என தெரிவித்துள்ளார்.

குறித்த பொதுத் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களிக்கவுள்ள நிலையிலேயே கோர்பின் மேற்குறித்தவாறு தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg