Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முக்கிய பிரமுகர்களின் வாகனங்களில் சிவப்பு சமிக்ஞை விளக்கை பயன்படுத்தத் தடை

In இந்தியா
Updated: 12:23 GMT, Apr 19, 2017 | Published: 11:30 GMT, Apr 19, 2017 |
0 Comments
1215
icon_com
This post was written by : Shailu
lights

அவசர சிகிச்சை வாகனங்களைத் தவிர ஏனைய வாகனங்களில் சிவப்பு சமிக்ஞை விளக்குகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  குறித்த உத்தரவானது, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இது குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

”இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆபத்து காலத்தில் அவசர சேவைக்காக செல்லும் வாகனங்களை தவிர்த்து ஏனைய வாகனங்களில் சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த அரசு சாதாரண மக்களுக்கான அரசு என்பதை உணர்த்தும் வகையில் முக்கிய பிரமுகர்களுக்கான வாகனங்களில் சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி பிரதமர், குடியரசுத் தலைவர், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளும் தங்கள் வாகனங்களில் சிவப்பு விளக்கை இனி பயன்படுத்த முடியாது என்று கூறப்படுகின்றது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இது தொடர்பான அறிவிப்பு நிலுவையில் இருந்த நிலையில், சிவப்பு விளக்கு பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தற்போது இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg