Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக்காக சதுப்பு நில காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை

In இலங்கை
Updated: 11:50 GMT, Apr 19, 2017 | Published: 11:50 GMT, Apr 19, 2017 |
0 Comments
1139
This post was written by : Risha

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள 20 ஏக்கர் சதுப்பு நில காணிகளை சுவீகரித்து, அங்கு பிரதேசத்தின் முக்கிய அலுவலகக் கட்டிடங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்போது, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இவ்வருடம் அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள், கிராமத்துக்கு ஒரு வேலை எனும் திட்டத்தினூடாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

மேலும், அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை, வேறு பொருத்தமான இடமொன்றுக்கு மாற்றுவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அட்டாளைச்சேனை பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி கருதி கைவிடப்பட்ட நிலையில் உள்ள சதுப்பு நில காணியில் 20 ஏக்கரை சுவீகரித்து, பிரதேசத்தின் மிக முக்கிய அலுவலகக் கட்டடங்களை அமைப்பது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg