Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுத் தேர்தல் பிரித்தானியா செல்லும் பாதையை மாற்றியமைக்க வல்லது: லிபரல் ஜனநாயகக் கட்சி தலைவர்

In
Updated: 12:27 GMT, Apr 19, 2017 | Published: 12:25 GMT, Apr 19, 2017 |
0 Comments
1337
This post was written by : Sylviya

எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தல், பிரித்தானியா  தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் பாதையை மாற்றியமைக்க வல்லது என லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மாற்றியமைக்கும்  டிம்   ஃபெரோன் (Tim Farron) தெரிவித்துள்ளார்.

குறித்த பொதுத் தேர்தல் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ஆரம்பித்துள்ள விவாதத்தின் போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதனால் அதன் ஒற்றைச் சந்தையிலிருந்தும் பிரித்தானியா விலக வேண்டியுள்ள சூழ்நிலையையும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் குறித்த நிலைமைகள் தொடர்பில் நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், பிரதமர் மே தொலைக்காட்சியில் நடத்தப்படும் விவாதங்களில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்ததன் காரணம் தொடர்பிலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “நான் தெரேசா மேயுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். ஆனால் தற்போது மட்டும் ஏன் பிரதமர் மே தொலைக்காட்சி நேரடி விவாதங்களில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவிக்கின்றார்? பிரதமருடன் கட்சித் தலைவர்கள் விவாதிப்பதை நாட்டு மக்களும் பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

குறித்த கேள்விக்கு பதிலளித்த மே, இந்த விடயங்கள் தொடர்பில் அவர் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவார் எனவும் கன்சர்வேட்டிவ் அரசாங்கம் வெற்றிகரமான பிரெக்சிற்றை ஏற்படுத்தும் என்பதை நிரூபிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg