Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐ.பி.எல்: ஹைதராபாத் அணியிடம் மண்டியிட்டது டெல்லி அணி

In கிாிக்கட்
Updated: 05:38 GMT, Apr 20, 2017 | Published: 04:44 GMT, Apr 20, 2017 |
0 Comments
1238
icon_com
This post was written by : Anojkiyan
shik

ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், ஹைதராபாத் அணி 15 ஒட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ஒட்டங்களை பெற்றது. அணியின் அதிகபட்ச ஒட்டமாக வில்லியம்சன் 89 ஒட்டங்களையும், தவான் 70 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, 192 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி அணியால் 20 ஒவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ஒட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. இதனால் டெல்லி அணி 15 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஷிரியாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியில் ஹைதராபாத் அணி சார்பில் 89 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வில்லியம்சன் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg