Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ளது ‘டிஜிட்டல் வகுப்பறை’

In இலங்கை
Updated: 04:39 GMT, Apr 20, 2017 | Published: 04:38 GMT, Apr 20, 2017 |
0 Comments
1091
This post was written by : Varshini
unnamed (21)

பாடசாலைகளில் டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் மாதிரி வகுப்பறைகளை அமைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக மாதிரி டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் வகுப்பறை ஒன்று கல்வி அமைச்சில் நேற்று (புதன்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து இதனை திறந்துவைத்தனர்.

இந்த மாதிரி வகுப்பறையை மாணவர்கள்¸ ஆசிரியர்கள், அதிபர்கள் பார்வையிடவும் பயன்பெறவும் முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் வளர்ந்துவரும் தொழிநுட்ப முன்னேற்றத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்படும் இச் செயற்பாடு, முதலாவதாக தெரிவுசெய்யப்பட்ட சில பாடசாலைகளில் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கான உபகரணங்களை வழங்கும் நடவடிக்கையும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg