Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வலுவான பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் நாடு முன்னோக்கிச் செல்கிறது: ஜனாதிபதி

In இலங்கை
Updated: 05:35 GMT, Apr 20, 2017 | Published: 04:43 GMT, Apr 20, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Risha
maithripala-sirisena

மிகவும் சாதகமான மற்றும் வலுவான பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் நாடு முன்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும், ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. குறித்த சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் வெளிநாட்டு இருப்புக்கள் ஏற்கனவே 5 பில்லியன் டொலர்களை கடந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன்மூலம் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் தெரிவித்த ஜனாதிபதி, சைட்டம் கல்லூரியை கொழும்பு பங்குச் சந்தையின் கீழ் பட்டியல்படுத்தி தனிச் சபையின் கீழ் நிர்வகிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg