Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கு காரணமான முக்கிய சூத்திரதாரியை கண்டறிய நீதிபதிகள் குழு

In இலங்கை
Updated: 06:06 GMT, Apr 20, 2017 | Published: 06:06 GMT, Apr 20, 2017 |
0 Comments
1190
icon_com
This post was written by : Risha
Maithr's Speech on 14

மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கு காரணமான முக்கிய சூத்திரதாரிகளை கண்டறியும் வகையில், அனர்த்தம் குறித்து ஆய்வுசெய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு தினத்தில் மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில், முன்னாள் நீதிபதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க உத்தரவிட்டுள்ளேன்.

அதன்படி, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க ஒரு மாதகால அவகாசம் வழங்கப்படவுள்ளது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், அனர்த்தத்திற்கு காரணமான முக்கிய சூத்திரதாரிகள் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் 30இற்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், குறித்த பகுதியில் இன்று 7ஆவது நாளாகவும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg