Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வெனிசுவேலா அரசுக்கு எதிரான போராட்டங்களில் இருவர் சுட்டுக் கொலை

In உலகம்
Published: 05:42 GMT, Apr 20, 2017 |
0 Comments
1200
icon_com
This post was written by : Elakkiya

வெனிசுவேலா ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள வெனிசுவேலாவில் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று (புதன்கிழமை) கொலம்பியா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சான் கிறிஸ்டோபல் நகரில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பவுலா ரமிரெஸ் என்ற பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தார்.

இவர் ஆர்ப்பாட்டத்திலிருந்து வெளியேறும்போது சுட்டுக்கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை காராகஸ் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 18 வயதான கார்லோஸ் மொரேனோ என்ற மாணவன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் நோக்கி செல்லவில்லை என்றும் கால்பந்து விளையாடுவதற்காக சென்ற வழியில் அரச ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் மாணவனின் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவன் அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாதத்தில் மாத்திரம் வெனிசுவேலாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg