Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தாய்லாந்தில் குண்டுத்தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

In உலகம்
Published: 05:58 GMT, Apr 20, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Elakkiya

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் சம்பவங்கள், மலேசிய எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நாரதிவட்(Narathiwat), பட்டானி (Pattani) மற்றும் சோங்க்லா (Songkhla) ஆகிய மாகாணங்களின் 11 மாவட்டங்களில் நேற்று (புதன்கிழமை) மாலை நடத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படைகள் மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேற்படி தாக்குதல் சம்பவங்களுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தாக்குதல் இடம்பெற்ற பிராந்தியங்கள் நீண்டகாலமாக பிரிவினைவாத கிளர்ச்சிகளை எதிர்கொண்டுள்ளன. கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து பௌத்த ஆட்சிக்கு எதிராக நடைபெறும் இத்தகைய பிரிவினைவாத கிளர்ச்சிகளால் 6500ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

தாய்லாந்தானது பௌத்தர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடாகும். இங்குள்ள தெற்கு பகுதிகளில் முஸ்லிம்களும் வாழ்கின்றமை  குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg