Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 07:26 GMT, Apr 20, 2017 | Published: 06:26 GMT, Apr 20, 2017 |
0 Comments
1174
icon_com
This post was written by : Elakkiya

மத்திய கொலம்பியாவின் மனிஷேல்ஸ் பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட இந்த மண்சரிவு குறித்து உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம் இவ்விடயம் தெரியவந்துள்ளது. காணாமல் போனோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய அனர்த்த முகாமைத்துவ அமைப்பின் தலைவர் கார்லோஸ் இவான் மார்கேஸ், “காணாமல் போனோரை தேடும் பணிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகள் குறித்து உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டுத்திட்டங்கள் முக்கிய நோக்கமாக கொள்ளப்படும். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஜனாதிபதி ஜூவான் மனுவல் சான்ரோஸூடன் விஜயம் மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட சுமார் 500 குடும்பங்களுக்கு தற்காலிக வீட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொள்வதற்காக சுமார் 52.3 அமெரிக்க டொலர்கள் நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg