Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

பொலிஸ்மா அதிபரின் உத்தரவை மீறிய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பதவிநீக்கம்

In இலங்கை
Updated: 07:23 GMT, Apr 20, 2017 | Published: 06:23 GMT, Apr 20, 2017 |
0 Comments
1298
This post was written by : Risha
dism

பொலிஸ்மா அதிபரின் உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய புத்தாண்டு தினத்தில் பாதுகாப்பு கடமைகளை முன்னெடுக்க தவறியதையடுத்து நேற்று (புதன்கிழமை) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில், மாவட்ட உதவி பொலிஸ்மா அதிபரினால் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முக்கிய சந்திகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவேண்டும் என சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா சந்தியில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் எவரும் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்காத நிலையிலேயே இந்த அதிரடி பதவிநீக்கம் இடம்பெற்றுள்ளது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.