Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரிக்கெட் உலகின் ராஜா நான்: கெய்ல் பெருமிதம்

In கிாிக்கட்
Updated: 08:04 GMT, Apr 20, 2017 | Published: 07:35 GMT, Apr 20, 2017 |
0 Comments
1128
This post was written by : Anojkiyan
Royal-Challengers-Bangalore-batsman-Chris-Gayle-celebrates-his-century41

“கிரிக்கெட் உலகின் ராஜா நான்” என பல்வேறு சாதனைகளுக்கு உரித்தானவரான மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் பெருமிதமாக கூறியுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் ரிருவென்ரி தொடரில் விளையாடிவரும் கெய்ல், ரி-ருவென்ரி கிரிக்கட் வரலாற்றில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான போட்டியில், பெங்களூர் அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கெய்ல், 38 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் உள்ளடங்கலாக 77 ஓட்டங்களை பெற்றிருந்தார். இப்போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கெய்ல் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

இந்நிலையில், தனது துடுப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்த கிறிஸ் கெய்ல், “களம் இறங்குவதற்கு முன்பாக சக வீரர் சாமுவேல் பத்ரீ, இன்னும் 3 ஓட்டங்கள் எடுத்தால் போதும், ரிருவென்ரி கிரிக்கெட்டில் 10 ஆயிரம் மைல்கல்லை எட்டி விடுவீர்கள் என்பதை நினைவூட்டினார். அதனால் துடுப்பாட்டம் செய்த போது அதுவும் எனது மனதில் இருந்தது. சாதனையை கடந்தவுடன், ‘இது அடித்து நொறுக்க வேண்டிய நேரம்’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டு துடுப்பெடுத்தாட இறங்கினேன். முடிவில் நல்ல பலன் கிடைத்தது. இந்த ஓட்ட எண்ணிக்கையை எட்டியது மனநிறைவை தருகிறது.

மக்கள் இன்னமும் கிறிஸ் கெய்ல் நம்மை குதூகலப்படுத்துவார் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் எனக்கு உத்வேகம் அளிக்கிறது. டெஸ்டில் இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளேன். ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதத்தை விளாசி உள்ளேன். இந்த ‘கிரிக்கெட் உலகின் ராஜா’ இன்னும் இங்குதான் இருக்கிறார். இரசிகர்களுக்கு ஓட்ட மழை பொழிந்து விருந்து படைக்கக்கூடிய திறமையுடன்தான் இருக்கிறார் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பியது சிறப்பான விடயம். இந்த இன்னிங்சில் ஓட்டங்களைக் குவிப்பது, எனக்கு மிகவும் அவசியமாக இருந்தது. 10 ஆயிரம் ஓட்டங்களை முதல் வீரராக கடந்தது மிகப்பெரிய கௌரவம். அந்த சாதனையை நிகழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தருணத்தில் இரசிகர்கள் மற்றும் நான் விளையாடிய அணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சில ஆயிரம் ஓட்டங்களை என்னால் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg