Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பதற்றங்களுக்கு மத்தியில் கூட்டு விமானப்படை பயிற்சியை நடத்தியது தென்கொரியா

In
Published: 07:53 GMT, Apr 20, 2017 |
0 Comments
2591
icon_com
This post was written by : Elakkiya

கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரிய விமானப் படைகளின் கூட்டுப் பயிற்சி இன்று (வியாழக்கிழமை) இடம்பெறுகின்றது.

கன்சன் விமானத் தளத்தில் நடைபெற்ற இந்த பயிற்சிகளில் சுமார் 1500 அமெரிக்க மற்றும் தென்கொரிய விமானப் படையினர் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது, போர்ச்சூழல்களில் ஒத்துழைப்புகளை அதிகரிக்கும் முயற்சியில் எவ்-16, எவ்-15கே உள்ளடங்கலான 80 விமானங்கள் இருதரப்பினர் மத்தியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்தவார இறுதியில் கொரிய தீபகற்பத்தை நோக்கி அமெரிக்கா தனது விமானப்படைத் தளத்தை திசைதிருப்பிய நிலையில், வடகொரியா விரைவில் ஆறாவது அணுவாயுத சோதனையை நடத்தக் கூடும் என்ற அச்சம் தோன்றியுள்ளது.

அதுமட்டுமின்றி வடகொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையில் இன்னமும் போர் சூழலே நிலவுகின்றது.

இந்நிலையில், வடகொரியாவுக்கு எதிரான தென்கொரிய படைகளுடன் சுமார் 28 ஆயிரத்து 500 அமெரிக்க துருப்புக்கள் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தென்கொரியாவில் நிலைநிறுத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg