Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

டிவில்லியர்ஸின் வாய்ப்பை கெய்ல் நேர்த்தியாக பயன்படுத்திக்கொண்டார்: கோஹ்லி

In கிாிக்கட்
Updated: 08:26 GMT, Apr 20, 2017 | Published: 07:56 GMT, Apr 20, 2017 |
0 Comments
1270
icon_com
This post was written by : Anojkiyan
rcb-new-jersey-unveiled_68bc30a2-061f-11e6-b721-c78c25b321e6

ஐ.பி.எல். தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடிவரும் ஏ.பி.டிவில்லியர்ஸ் உபாதையில் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிறிஸ் கெய்ல், தனது வாய்ப்பை நேர்த்தியாக பயன்படுத்திக்கொண்டதாக அணியின் தலைவர் விராட் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.

இப்போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கெய்ல், 38 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் உள்ளடங்கலாக 77 ஓட்டங்களைப் பெற்றார். இப்போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கெய்ல் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

அத்தோடு, ரி-ருவென்ரி அரங்கில் 10000 ஓட்டங்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையையும் கெய்ல் தனதாக்கினார். இது குறித்து அணியின் தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில்,

”காயமடைந்த டிவில்லியர்ஸிற்கு பதிலாக விளையாடிய கிறிஸ் கெய்ல், தனக்குக் கிடைத்த வாய்ப்பை நேர்த்தியாக பயன்படுத்திக் கொண்டார். ரி-ருவென்ரி கிரிக்கெட்டில் மிகவும் அபாயகரமான ஒரு வீரர் கெய்ல். அவர் இதேபோன்று விளையாடினால், இன்னிங்ஸ் முழுவதும் நான் நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடுவதற்கு உதவிகரமாக இருக்கும். இதே மாதிரியான சூழலில் பிற்பகுதியில் ஓட்ட வேகத்தை தீவிரப்படுத்தினால் போதும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg