Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரித்தானியாவுடன் அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தவுள்ளது

In
Published: 08:18 GMT, Apr 20, 2017 |
0 Comments
1233
icon_com
This post was written by : Elakkiya

பிரித்தானியாவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை விரைவில் ஏற்படுத்திக்கொள்வதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பவுல் ரியன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கான விஜயத்தின்போது லண்டனில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கொள்கை பரிமாற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, வர்த்தக மற்றும் முதலீட்டு கூட்டு ஒப்பந்த உடன்படிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்கா நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதாக பவுல் ரியன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஷ்ய ஆக்கிரமிப்புக்கள் நேட்டோவால் வலுவாக கையாளப்படக்கூடும் என்றும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய நாடுகள் தமது பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg