Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்காக உயிர்த் தியாகம் செய்யவும் தயார்: உமா பாரதி

In இந்தியா
Published: 09:27 GMT, Apr 20, 2017 |
0 Comments
1159
icon_com
This post was written by : Shailu

அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்காக உயிர்த் தியாகம் செய்யவும் தயார் என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் 13 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) உத்தரவிட்டிருந்த நிலையில்,  குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் உமா பாரதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “1990-களில் இராமர் ஆலய இரத யாத்திரை நடத்தப்பட்டதில் எந்தவிதமான ஒளிவு மறைவோ, சதிச் செயலோ இல்லை. அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாகவே இருந்தன.

அதில் நானும் பெருமிதத்தோடு கலந்துகொண்டேன். இராமர் ஆலயம் கட்டப்பப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காக எனது பதவியையும் துறந்தேன். அது எனக்கு மிகவும் பெருமைக்குரிய விடயமாக இருந்ததே அன்றி, வருத்தம் தெரிவிப்பதற்கோ, மன்னிப்புக் கோருவதற்கோ எதுவும் இல்லை.

இந்த நடவடிக்கைகளில் சதித் திட்டம் இருப்பதாகக் கூறுவறு தவறு. அயோத்தியில் இராமர் ஆலயமொன்று அமைய வேண்டும் என்பதற்காக நான் எத்தகைய தியாகத்தை வேண்டுமானலும் செய்ய தயாராக உள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி, ராஜஸ்தான் மாநில ஆளுநர், உத்தரபிரதேசத்தின் அப்போதைய முதலமைச்சர் கல்யாண் சிங் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால் வழக்கை விசாரித்த ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 13 பேரை விடுதலை செய்திருந்த நிலையில், வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg