Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறு முதலீட்டில் உருவாகவுள்ள திகில் படம்: இயக்குநர் விஜய் திட்டம்

In சினிமா
Updated: 09:16 GMT, Apr 20, 2017 | Published: 09:07 GMT, Apr 20, 2017 |
0 Comments
1099
This post was written by : Vithushagan

‘வனமகன்’ படத்தைத் தொடர்ந்து சிறியளவான முதலீட்டில் கதாநாயகியை முன்னிலைப்படுத்தி  திகில் படமொன்றை இயக்குவதற்கு இயக்குநர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

ஜெயம் ரவி, சைஷா சைகல், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வனமகன்’. இப்படத்தை விஜய் இயக்கி தயாரித்துள்ளார். எதிர்வரும் 22ஆம் திகதி  இசை வெளியீடு இடம்பெறவுள்ளதோடு,  மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக  படக்குழு தெரிவித்துள்ளது.

‘வனமகன்’ படத்தைத் தொடர்ந்து, மாதவன் – சாய் பல்லவி நடிப்பில் உருவாகவிருந்த படத்தை இயக்க ஒப்பந்தமானார் விஜய். இது ‘சார்லி’ என்ற மலையாள படத்தின் தமிழ் மீள் உருவாக்கம் ஆகும்.

தற்போது ‘சார்லி’ மீள் உருவாக்கம் தள்ளிப் போவதால் அதற்கு முன்பாக புதிய படமொன்றை இயக்கவுள்ளார் விஜய். குறைந்த நாட்கள் படப்பிடிப்பில் சிறு முதலீட்டில் இப்படம் உருவாகவுள்ளது. நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகவுள்ள இப்படத்தில் நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg