Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர் லீ பென்னிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மோதல்

In ஐரோப்பா
Updated: 10:51 GMT, Apr 20, 2017 | Published: 10:12 GMT, Apr 20, 2017 |
0 Comments
1183
icon_com
This post was written by : Elakkiya
9650ab08-14d9-4e04-8e05-a4fcf69a0efc

பிரான்ஸின் தெற்குநகரான மார்செய்லில் தீவிர வலதுசாரி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான மரைன் லீ பென்னிற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின்போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.

பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பொலிஸார் மீதும் தீயணைப்புப்படை அதிகாரிகள் மீதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியதை அடுத்து  மோதல் ஏற்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் நோக்கில் பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருந்த இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சிலர் லி பென்னிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அத்துடன் ‘குடியேற்றவாசிகளை வரவேற்கிறோம்’, ‘பாசிசவாதிகள் வெளியேறு’ , ‘தீவிர வலதுசாரிகளான நீங்கள் வாக்குப்பெட்டியில் போராட முடியாது’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.

பிரான்ஸில் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் ஃபிரான்சுவா ஃபிலோன், இமானுவேல் மக்ரோன், ஹமொன், ஜீன் லக்மெலென்சோன் மற்றும் மரைன் லீ பென் ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg