Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

In சினிமா
Updated: 10:45 GMT, Apr 20, 2017 | Published: 10:27 GMT, Apr 20, 2017 |
0 Comments
1270
icon_com
This post was written by : Anojkiyan
sac

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற படத்தின் டிரைலரை பார்த்த சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சச்சினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “அன்பிற்குரிய சச்சின் அவர்களுக்கு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சச்சினும் ‘நன்றி தலைவா. படத்தை தமிழில் பார்த்து மகிழுங்கள்’ என்று குறிப்பிட்டு, சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் படத்தின் தமிழ் பதிப்பின் டிரைலரையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

ஜேம்ஸ் எர்ஸ்கினின் இயக்கத்தில் ஆவணப்படமாக உருவாகிவரும் ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ படம், எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதி வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg