Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விசேட திட்டம்

In இலங்கை
Updated: 11:31 GMT, Apr 20, 2017 | Published: 11:15 GMT, Apr 20, 2017 |
0 Comments
1074
This post was written by : Vithushagan
1874068030school

மீதொட்டமுல்ல  அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைப்பது தொடர்பில் விசேட திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், பாதிக்கப்பட்ட மாணவர்களின் முழு விபரங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கொழும்பு மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

முதலாம் தவணை விடுமுறை நிறைவடைவதற்கு முன்னர், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கண்ணங்கர கூறியுள்ளார்.

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11பேர்வரை காணாமல் போயுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg