Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சசிகலா – தினகரனை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை: ஓ.பி.எஸ் அணி

In இந்தியா
Published: 11:01 GMT, Apr 20, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Shailu

சசிகலா நடராசன் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இன்று (வியாழக்கிழமை) காலை ஆலோசனை கூட்டம் ஒன்றில் ஈடுபட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  கே.பி.முனுசாமி மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு மாநில அரசு வலியுறுத்த வேண்டும். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை நீக்க வேண்டும் என்று இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை ஆரம்பித்தார்.

இதனையடுத்து தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு எங்களது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி.

இருப்பினும் சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்து, தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்கள்.

அரசியல் குழுவின் வாயிலாக டெல்லியில் அவர்கள் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தை மீளப் பெற வேண்டும். அத்தோடு சசிகலா மற்றும் தினகரனிடம் இருந்து முறைப்படி இராஜினாமா கடிதத்தையும் பெற வேண்டும்.

மேலும் கழகத்தின் சட்ட விதிகளின் படி கட்சியில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு முன்வருவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg