Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பழங்கள்!

In
Updated: 12:12 GMT, Apr 20, 2017 | Published: 12:00 GMT, Apr 20, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Shailu
Fruits

பழவகைகளை சாப்பிடுவதன் மூலமாக, நீரிழிவு நோயை வெகுவாகக் குறைக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

வயது வித்தியாசம் இன்றி, நாள்தோறும் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, உணவுப்பழக்கமே அடிப்படை காரணமாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், இயற்கை வகை உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிடுவதற்கும், நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடர்பு பற்றி, ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு ஒன்று ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில், இயற்கையான அதுவும் செடியில் இருந்து பறிக்கப்பட்டு சில நாட்களே ஆன பழ வகைகளை, வாரத்திற்கு 5 நாட்கள் சாப்பிடுவதன் மூலமாக, நீரிழிவு நோயை 17வீதம் வரை குறைக்க முடியும் என உறுதியாகியுள்ளது.

நீரிழிவு நோயால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவும் பழங்கள் உதவுகின்றன. அது மட்டுமின்றி, இரத்த ஓட்டத்தை சீராக்குதல், செரிமான பிரச்சினையை போக்குதல், மாரடைப்பு அறிகுறிகளை தடுப்பது, சிறுநீரகச் செயற்பாட்டை பாதுகாப்பது, கண்கள் மற்றும் நரம்பு தொடர்பான நோய்களை நீக்குவது என, பழங்களின் மருத்துவ குணங்களைப் பட்டியலிட்டுகின்றனர் பேராசிரியர்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg