Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கழிவகற்றல் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல்: ஜனாதிபதி உத்தரவு

In இலங்கை
Updated: 17:17 GMT, Apr 20, 2017 | Published: 17:17 GMT, Apr 20, 2017 |
0 Comments
1391
This post was written by : Vithushagan

அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் குப்பைகளை வெளியேற்றும் நடவடிக்கையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வகையிலான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு இந்த வர்த்தமானி அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாகவும் நடைமுறைப்படுத்துகின்ற குப்பைகளை வெளியேற்றுதல், கொண்டு செல்லுதல், தற்காலிகமாக களஞ்சியப்படுத்தல், தயாரித்தல், கொட்டுதல் ஆகிய சேவைகள் இந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைகளை தவிர்த்தல், அழுத்தங்களை பிரயோகித்தல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படல் போன்ற செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றம் என இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த நடைமுறையை பின்பற்றாதவர்களை பிடியாணை இன்றி கைது செய்து, நீதிமன்றத்தின் ஊடாக சிறைத் தண்டனை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg