Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐ.பி.எல்: பஞ்சாப் அணியை துவம்சம் செய்தது மும்பை அணி

In கிாிக்கட்
Updated: 04:21 GMT, Apr 21, 2017 | Published: 04:12 GMT, Apr 21, 2017 |
0 Comments
1802
icon_com
This post was written by : Anojkiyan
but

ஐ.பி.எல் தொடரின் 22வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழ்ற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி, அம்லாவின் சதத்தின் துணையுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்களை பெற்றது. இதன்போது அம்லா ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மெக்லகஹன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 199 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பை அணி, பட்லர் மற்றும் ராணாவின் அதிரடி மூலம் 15.3 ஒவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலகுவாக வெற்றி இலக்கை கடந்தது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பட்லர் 77 ஓட்டங்களையும், ராணா 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இப்போட்டியில் ஆட்டநாயகனாக பட்லர் தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg