Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குப்பை சேகரிப்பை ஓர் அத்தியாவசிய சேவையாக்க வேண்டும்: சம்பிக்க

In இலங்கை
Updated: 04:25 GMT, Apr 21, 2017 | Published: 04:25 GMT, Apr 21, 2017 |
0 Comments
1276
This post was written by : Ravivarman

குப்பை சேகரிப்பு நடவடிக்கையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி, மத்திய அதிகார சபையின் கீழ் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் என மேல் மாகாண மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டிலுள்ள இந்த குப்பை பிரச்சினை தொடர்பில், சகல மக்களும் அக்கறை கொள்ள வேண்டும். இது தனியாக அரசாங்கம் மட்டும் அக்கறை கொள்ள வேண்டிய விடயமல்ல. குப்பைகள் அகற்றுதல் தொடர்பான விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்கவேண்டும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இதில் பொறுப்புக் கூறவேண்டிய தேவை இருக்கின்றது.

எனினும் இது குறித்த ஒழுங்கான கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான நடைமுறைகளை அரசாங்கம் மக்களுக்கு வழங்குவதன் மூலமே இதற்கு ஒரு நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்” என அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg