Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த நான்கு பேர்  இந்தியாவில் கைது

In இந்தியா
Published: 04:54 GMT, Apr 21, 2017 |
0 Comments
1201
This post was written by : Surenth
ISIS in India

இந்தியாவில் தீவிரவாத தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்த ‘ஐ.எஸ் கொரொசன்’ பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் உத்தரபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது தொடர்பில் உத்தரபிரதேச மாநில தீவிரவாத தடுப்பு பொலிஸ் ஐ.ஜி. அசீம் அருண் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஐ.எஸ் கொரொசன்’ தீவிரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பையுடைய 4 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனரெனவும் அவர்கள் நாட்டில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

முப்தி பைசான், தன்வீர் ஆகிய இருவரும் பிஜ்னோர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும் நசீம் சம்ஷாத் அகமது, மும்ப்ராவில் கைது செய்யப்பட்டதாகவும் முசம்மில் ஜலந்தரில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ள முக்கிய ஆவணங்கள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg