Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விஷேட கலந்துரையாடல்

In இலங்கை
Published: 04:56 GMT, Apr 21, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Ravivarman
maithri

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் மேலதிகமாக நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் கீழ் இன்று (வெள்ளிக்கிழமை) விஷேட கலந்துரையாடல் ஒன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில், வீடுகளை இழந்த 98 பேரில் முதல் கட்டமாக 60 பேருக்கு வீடுகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மீளவும் ஒரு கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

எனினும் இன்றைய  கலந்துரையாடலில், மீட்புப் பணிகளின் தற்போதைய நிலைமைகள், தற்காலிக தங்குமிட வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற விடயங்கள் குறித்து மேலதிகமாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவ்வனர்த்தம் காரணமாக 246 குடும்பங்களைச் சேர்ந்த 1059 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 76 குடும்பங்களைச் சேர்ந்த 284 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg