Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தரவரிசையில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் ஏமாற்றம் அடையவில்லை: பி.வி. சிந்து

In விளையாட்டு
Published: 06:06 GMT, Apr 21, 2017 |
0 Comments
1232
icon_com
This post was written by : Anojkiyan
pv

சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் எந்த ஏமாற்றமும் அடையவில்லை என இந்தியாவின் வெள்ளி மங்கை என வர்ணிக்கப்படும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து கூறியுள்ளார்.

மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறிய பி.வி. சிந்து, சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் 2வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது தரவரிசையில் ஏற்றம் இரக்கம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

”நன்றாக விளையாடி, சிறந்த திறமையை வெளிப்படுத்தினால் உங்களுடைய தரநிலை தானாகவே முன்னேற்றம் அடையும். வெற்றி, தோல்வி என்பது வாழ்வின் ஒரு பகுதிதான். சில நேரங்கள் வெற்றி பெறலாம். சில நேரங்கள் தோல்வியை சந்திக்கலாம்.

ஸ்பெயின் நாட்டின் மரின் கரோலினாவை சில சமயம் நான் வென்றுள்ளேன். சில சமயம் தோற்றுள்ளேன். போட்டியின்போது இருவரில் ஒருவர்தான் பெற்றி பெற முடியும். அதற்காக போட்டியிட்டுக் கொள்வோம். விளையாட்டிற்கு வெளியே நாங்கள் தோழிகள்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg