Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் எர்டோகன் வொஷிங்டன் விஜயம்

In உலகம்
Published: 05:55 GMT, Apr 21, 2017 |
0 Comments
1196
icon_com
This post was written by : Risha

துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை புதுப்பிக்கும் வகையில் எதிர்வரும் மே மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப்பை வொஷிங்டனில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

தலைநகர் அங்காராவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற துருக்கி இராணுவ புரட்சியை தொடர்ந்து துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி மேற்கொள்ளவுள்ள இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம், சிதைவடைந்த இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் அமையும் என துருக்கி ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, துருக்கியில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியின் பின்னணியில் அமெரிக்காவில் வசிக்கும் துருக்கி மதகுரு பெத்துல்லா குலென் இருப்பதாக துருக்கி ஜனாதிபதி ஏர்டோகன் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், அவரது நாடு கடத்தல் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது வலியுறுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர், துருக்கி ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள முதல் சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg