Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரஷித்கான் கடினமான சூழ்நிலையிலும் சிறப்பாக பந்து வீசுகிறார்: லஷ்மண் புகழாரம்

In கிாிக்கட்
Updated: 07:08 GMT, Apr 21, 2017 | Published: 06:55 GMT, Apr 21, 2017 |
0 Comments
1096
icon_com
This post was written by : Anojkiyan
rasheed-khan

ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷித்கான் கடினமான சூழ்நிலையிலும் சிறப்பாக பந்து வீசுவதாக அணியின் ஆலோசகர் லஷ்மண் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் தனது சுழலில் முன்னணி வீரர்களை திக்குமுக்காட வைக்கும் இளம் வீரரான ரஷித்கானின் மாயாஜாலம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்களின் பாராட்டை பெற்றுவரும் ரஷித்கானுக்கு அணியின் ஆலோசகரான லஷ்மணும் பாராட்டு மழையில் நனைய வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

“ரஷித்கான் முக்கிய வீரராக உள்ளார். அவர் விக்கெட்டுக்களை வீழ்த்துவதுடன், கடினமான சூழ்நிலையிலும் சிறப்பாக பந்து வீசுகிறார்.

நாங்கள் நெருக்கடிக்கு உள்ளான நேரத்தில் பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு ஆகிய மூன்றில் எதையும் குறித்து கவலையடைவில்லை. குறிப்பாக போட்டி நெருங்கி வரும்போது எந்த பதற்றமும் இல்லை. நாங்கள் எப்போதும் மூன்று துறையிலும் முன்னேற்றத்தை பார்க்கிறோம்.

கடந்த வருடம் எங்களிடம் இருந்த சில தவறுகளை புதிய வீரர்களை கொண்டு சரிசெய்து கொள்ள பார்க்கிறோம். புதிய வீரர்களை கொண்டு, சிறந்த களத்தடுப்பை உருவாக்குவது விளையாடும் 11பேர் கொண்ட அணி, எதிரணி மற்றும் அப்போதைய சூழ்நிலையை பொறுத்தது.

நாங்கள் திறமை வாய்ந்த ஏராளமான வீரர்களை பெற்றுள்ளோம். ஆனால், கிரிக்கெட் போட்டியில் 11 பேர்தான் விளையாட முடியும். அதில் சில துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமே களமிறங்க முடியும் என்பது துரதிருஷ்டவசமானது. நாங்கள் ஒரு பந்து வீச்சாளர் அல்லது ஒரு துடுப்பாட்ட வீரனை மட்டுமே சார்ந்திருக்கவில்லை என்பதை பார்ப்பது சிறந்ததாக உள்ளது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg