Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

டோனிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை உலகமே சொல்கிறது: ரெய்னா

In கிாிக்கட்
Updated: 12:00 GMT, Apr 21, 2017 | Published: 07:32 GMT, Apr 21, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Anojkiyan
dhoni_raina_walk

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு எந்த நேரமும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை நான் மட்டுமல்ல உலகமே சொல்கிறது என இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சோபிக்க தவறிவரும் டோனி, பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றதன் பின்னணியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை நடப்பு ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றுள்ள ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து டோனியை நீக்கியது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டிற்காகவும், ஐ.பி.எல். அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டுள்ள டோனியை எல்லோரும் மதிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணியின் தலைவராக சுரேஷ் ரெய்னா செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg