Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரை அமெரிக்கா ஓயாது: மைக் பென்ஸ்

In
Updated: 08:24 GMT, Apr 21, 2017 | Published: 08:24 GMT, Apr 21, 2017 |
0 Comments
1419
This post was written by : Risha

உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவரும் தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்கும்வரை, அதற்கான முயற்சிகளிலிருந்து அமெரிக்கா ஒருபோதும் பின்வாங்காது என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜகார்த்தாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தொழிலதிபர்களுடனான வட்டமேசை மாநாடொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதத் தாக்குதல்கள் எந்நேரத்திலும் எந்த இடத்திலும் முன்னெடுக்கப்படலாம் என்பதை மீண்டுமொரு முறை நினைவூட்டும் வகையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாளை மறுதினம் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரிஸில் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் பிரான்ஸ் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து தாக்குதல்தாரி பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg