Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ்: வாவ்ரிங்காவுக்கு அதிர்ச்சி தோல்வி

In டெனிஸ்
Published: 09:40 GMT, Apr 21, 2017 |
0 Comments
1132
This post was written by : Anojkiyan


மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின், ஒற்றையர் பிரிவு போட்டியில், தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் ஸ்டென் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

மொனாக்கோவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 3வது சுற்று போட்டியில் சுவிஸ்சர்லாந்தின் வாவ்ரிங்கா, 27ஆம் நிலை வீரரான உருகுவேவின் பாப்லோ கியூவாஸ்சை சந்தித்தார்.

இதில் வாவ்ரிங்கா, எளிதாக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அனைத்து எதிர்பார்ப்பையும் தவிடுபொடியாக்கி 6-4, 6-4 என்ற நேர்செட்டில் பாப்லோ கியூவாஸ் வெற்றிபெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார்.

இன்று நடைபெறும் காலிறுதி போட்டியில், பிரான்ஸின் லூகாஸ் பியூலியை பாப்லோ கியூவாஸ் எதிர்கொள்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg