Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தேர்தலின்போது பாதுகாப்பு படையினரை முழுமையாக அணிதிரட்ட நடவடிக்கை: பிரான்ஸ் பிரதமர்

In ஐரோப்பா
Published: 09:26 GMT, Apr 21, 2017 |
0 Comments
1089
icon_com
This post was written by : Risha

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின்போது மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் பாதுகாப்பு படையினரை முழுமையாக அணிதிரட்டி பாதுகாப்பை பலப்படுத்தவுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பரிஸ் நகரை நிலைக்குலையச் செய்த நேற்றை தாக்குதல் தொடர்பில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற அவசர கூட்டத்தை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த பிரதமர், பிரான்ஸில் இரண்டு கட்டமாக இடம்பெறவுள்ள தேர்தலின் முதல்கட்ட தேர்தல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளுக்கு என ஏற்கனவே 50 ஆயிரம் பொலிஸார் மேலதிகமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தாக்குதலின் எதிரொலியாக அனைத்து பாதுகாப்பு படையினரும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருகின்றனர் என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg