Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஈ.பி.எஸ் அணியுடன் இணைய ஓ.பி.எஸ் அணி நிபந்தனை

In இந்தியா
Updated: 13:39 GMT, Apr 21, 2017 | Published: 11:29 GMT, Apr 21, 2017 |
0 Comments
1276
icon_com
This post was written by : Surenth
EPS OPS

எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மிகத் தெளிவாக மூன்று நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியும் எனவும் மா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

பெரம்பூரில் தண்ணீர் பந்தலை இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே பன்னீர்செல்வம் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான பாண்டியராஜன் இவ்வாறு குறிப்பிட்டார்.

சசிகலாவையும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும், தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிராமன பத்திரங்களை திரும்ப பெறவேண்டும் போன்ற நிபந்தனைகள் முன்வைக்கப்படும் என சுட்டிக்காட்டினார்.

பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சர் பதவியோ, பொதுச் செயலாளர் பதவியோ கேட்டு எவ்வித பேரமும் பேசவில்லை எனவும் அதற்கான அவசியமும் தனக்கு வில்லை எனவும் பாண்டியராஜன் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg