Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பரிஸ் தாக்குதல்தாரி ஒரு பிரான்ஸ் பிரஜை: உள்துறை அமைச்சர்

In ஐரோப்பா
Updated: 11:56 GMT, Apr 21, 2017 | Published: 11:56 GMT, Apr 21, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Risha
inter

பரிஸில் பொலிஸ் அதிகாரிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய நபர் ஒரு பிரான்ஸ் பிரஜை என பெல்ஜிய உள்துறை அமைச்சர் ஜான் ஜம்போன் தெரிவித்துள்ளார்.

பரிஸ் தாக்குதலை பொறுப்பேற்ற ஐ.எஸ். தீவிரவாதிகள், குறித்த நபர் அபு யூசிஃப் அல்-பெல்ஜிகி என்ற பெல்ஜிய பிரஜை என்று குறிப்பிட்டிருந்த நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அமைச்சர், துப்பாக்கிதாரி கரீம் சௌர்ஃபீர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபருக்கும் பெல்ஜிய வெளிநாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்புள்ளதா என்பதை கண்டறியும் வகையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இரண்டாவது சந்தேக நபரை கைது செய்வதற்கான முழு முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர் என்றும் உள்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் பரிஸில் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் பிரான்ஸ் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து தாக்குதல்தாரி பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg